பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களை காண்டிராக்ட் எடுத்துள்ள நிறுவனங்களில் ஒன்று கடந்த மார்ச் மாதத்துக்கான சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையையும், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளத்தை முழுமையாகவும் வழங்கவில்லை என்றும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்டிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரியும், காண்டிராக்டரை கண்டிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, ஜார்ஜ், ஆறுமுகம், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.