கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் பங்கேற்பு

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பங்கேற்றார்.

Update: 2018-05-10 22:45 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் நேற்று சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு...

மேலும், சுற்றுலா பயணிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சிவசூரியன், உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர்கள் பிரவீன்ரகு, சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் முக்கடல் சங்கம் பகுதி, காந்தி மண்டபம் பஜார் பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்