வாலாஜாபாத் அருகே டெம்போ மோதி ஒருவர் பலி

வாலாஜாபாத்தில் டெம்போ மோதி ஒருவர் பலியனார்.

Update: 2018-05-09 22:29 GMT
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த திம்மையன்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). இவர் கருக்குப்பேட்டையில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த மினி டெம்போ நடராஜன் மீது மோதியது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்