சாலையை சீரமைக்க கோரி வாழை நடும் போராட்டம்
நாகர்கோவில் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் வாழைநடும் போராட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் அருகே சந்தைவிளையில் இருந்து கனகமூலம் புதுகுடியிருப்பு வழியாக அவ்வையாரம்மன் கோவிலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் சாலையில் தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது.
எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வாழை நடும் போராட்டம்
இந்தநிலையில், நேற்று கனகமூலம் புதுகுடியிருப்பு பகுதியில் ஊர் தலைவர் பழனிவேல் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் வாழை மரங்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சேதமடைந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பழனிவேல் கூறும்போது, சேதமடைந்த சாலையை ஒரு வாரத்தில் சீரமைக்க வில்லை எனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்‘ என்றார்.