காஷ்மீர் சென்றபோது கல்வீச்சில் பலி: சென்னை வாலிபர் உடல் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது
காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது கல்வீச்சில் பலியான சென்னை வாலிபர் உடல் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தது. உடலுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஆவடி,
சென்னை ஆவடி அடுத்த பாலவேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 52). ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (45). இவர்களது மகன் திருமணிசெல்வம் (23). அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மகள் சங்கீதா (27). இவரும், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களின் குடும்பத்தினர் உள்பட சுமார் 40 பேர் கடந்த 4-ந் தேதி டெல்லிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு 2 நாட்கள் தங்கி சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர்.
ஸ்ரீநகர் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனைவரும் பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது ஸ்ரீநகர் நர்பால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டன. ராஜவேல் குடும்பத்தினர் சென்ற பஸ் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் திருமணிசெல்வத்தின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே இறந்தார். உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உடன் சென்றவர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆறுதல் கூறினார்.
பிரேதபரிசோதனைக்கு பின்னர் ஸ்ரீநகரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு உடல் கொண்டுவரப்பட்டது. விமானநிலையத்தில் சுற்றுலாத்துறை அதிகாரி ராஜாராம் மற்றும் ஆலந்தூர், ஆவடி வருவாய்த்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ராஜவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ஆவடி பாலவேடு பகுதியில் உள்ள இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு திருமணி செல்வத்தின் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் திருமணி செல்வம் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.