கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி கொலை வழக்கில் 3 பேர் கைது
கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்பாக்கம்,
சதுரங்கப்பட்டினம் புதிய பாலத்தில் நேற்று முன்தினம் சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்பட போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிதனியாக விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த பாலு என்ற பாலகிருஷ்ணன் (வயது 25), புதுப்பட்டினம் கிராமம் அகமது நகரை சேர்ந்த முபாரக் (26), புதுப்பட்டினம் பல்லவன் நகரை சேர்ந்த விஜய் (23), சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பத்தை சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (23) என்பது தெரியவந்தது.
அவர்களில் பாலு, முபாரக், விஜய் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கல்பாக்கம் அணுமின்நிலைய ஓய்வுபெற்ற விஞ்ஞானி பாபுராவ் (65) என்பவரை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமம் பாரத் நகர் பள்ளிக்கூடத்தெருவில் உள்ள வீட்டில் பாபுராவ் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் அவர் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த நாங்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தோம். அவரது கழுத்தில் நாற்காலியை வைத்து அழுத்தி கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தோம்.
பின்னர் வீட்டில் இருந்த மடிக்கணினி, கியாஸ் சிலிண்டரை திருடி சென்றோம். மடிக்கணினியை பூந்தண்டலத்தில் உள்ள கால்வாயில் வீசினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களிடம் இருந்து 5 தொலைக்காட்சி பெட்டிகள், 3 கியாஸ் சிலிண்டர்கள், 1 இன்வர்டர் பேட்டரி, 5 பவுன் மதிப்பிலான 2 தங்கச்சங்கிலிகள், ஒரு கத்தி, டி.வி.டி. பிளேயர் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.