பெரியமாரியம்மன் கோவில் திருவிழா
கொடைக்கானல் பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பாக நடைப்பெற்றது.
கொடைக்கானல்
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 17-ம் நாள் கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி பல்வேறு தரப்பினர் மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளினார். பல்வேறு பகுதிகளில் அம்மன் பவனி வருதல், திருக்கல்யாணம், மலர் வழிபாட்டு விழா, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான நேற்று மறு பூஜையும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களுடன், டெப்போகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெரியமாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மறுபூஜையும் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் முரளி செயலாளர் வேலுச்சாமி பொருளாளர் ஜெயராமன் உள்பட விழாக்குழுவினர், கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி மற்றும் ஆனந்தகிரி இந்து இளைஞரணியினர் செய்து இருந்தனர்.