நத்தஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம்
இண்டூர் அருகே நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாப்பாரப்பட்டி,
இண்டூர் அருகே நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தீமிதி விழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் ஆண்களும், பெண்களும் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து தினமும் மகாகும்பம், மலர் அலங்காரம், ஐந்து கால பூஜைகள், நரி, சிம்மம், குதிரை வாகனங்களில் அம்மன் வீதி உலா வருதலும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு சந்தை நடந்தது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு மாடுகளை வாங்கி சென்றனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.