ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேர் கைது
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை அரூர் அருகே போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்,
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் கார், வேன்களில் சென்னைக்கு புறப்பட்டனர்.
இந்தநிலையில் கோட்டப்பட்டி போலீசார் தீர்த்தமலை வனத்துறை சோதனைச்சாவடி அருகே இவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தாங்கள் சென்ற வாகனங்கள் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 பேர் கைது
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் செந்தில், ரங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி, முனிராஜ் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.