தஞ்சையில் சமுத்திரம் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் இடிப்பு
தஞ்சையில், சமுத்திரம் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் நீர் நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரிக்கரையில் புளியந்தோப்பு, அருண்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வசித்து வரும் பகுதி சமுத்திரம் ஏரிக்குட்பட்ட பகுதி என்பதால் இவர்களது வீடுகளை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து இவர்கள் வசிப்பதற்காக தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் அந்த வீடுகளுக்கு செல்ல அனைவரும் மறுத்து விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரி கரையில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பொக்லின் எந்திரம் மூலம் வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்படும் என்றும் வருவாய்த்துறையினர் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை சிலர் வாங்கி கொண்டனர். பலர் வாங்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் சமுத்திரம் ஏரிக்கரையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், பொக்லின் எந்திரத்துடன் புளியந்தோப்பு பகுதிக்கு வந்தனர். இதை பார்த்தவுடன் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பொதுமக்களை அழைத்து நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற நாங்கள் வந்துள்ளோம். உங்களுக்கு பிள்ளையார்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாதம்தோறும் ரூ.250 வீதம் 20 ஆண்டுகளுக்கு செலுத்தினால் அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகும். இதை விட்டு நீர்நிலைகளில் வசிக்க வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் மாடி வீடு, ஓட்டு வீடு, கூரை வீடு என 8 வீடுகளை பொக்லின் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். அருண்மொழிப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அருண்மொழிப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டனர்.