கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
திருச்சி,
தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பொன்மலை, போத்தனூர் உள்ளிட்ட பணிமனைகளையும், ரெயில்வேயையும் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அகில இந்திய ரெயில்வே கூட்டமைப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
திருச்சி ஜங்ஷனில் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பொன்மலை பணிமனை மற்றும் திருச்சி ஒருங்கிணைந்த எஸ்.ஆர்.எம்.யூ. கிளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி ஜங்ஷனில் நேற்று காலை 6 மணிக்கு ரெயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணை பொதுசெயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது ரெயில்வே ஊழியர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என்றார்.
உண்ணாவிரதத்தில் கோட்ட தலைவர் மணிவண்ணன் உள்பட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாப்பாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரதம் தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைகிறது.