மனநிலை பாதித்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்த நெசவு தொழிலாளி

மனநிலை பாதித்த இளம்பெண்ணை சில்மிஷம் செய்த நெசவு தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-05-08 22:30 GMT
ஆரணி

ஆரணியை அடுத்த மருசூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணிடம் அடிக்கடி பரிவு காட்டுவதுபோல் பேசுவார். அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் ஊரில் உள்ள அனைவரும் அரவணைப்புடன் இருந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கொடுக்காய்ப்புளி பறித்து தருவதாக கூறி அவரை சங்கர் அழைத்துச்சென்றார்.

அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஒருவர் சங்கரை கண்டித்தார். அதற்குள் அங்கிருந்தவர்கள் சங்கரை பிடித்து வைத்துக்கொண்டனர்.

இது குறித்து ஆரணி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சங்கரை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்