‘சொந்த மாவட்ட தேர்வு மையத்தில் ஒதுக்கி இருந்தால் தந்தையை இழந்து இருக்க மாட்டேன்’ மாணவி சுவாதி கண்ணீர் பேட்டி
சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையத்தில் ஒதுக்கி இருந்தால் எனது தந்தையை இழந்து இருக்க மாட்டேன் என்று மாணவி சுவாதி கண்ணீருடன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
தந்தை இறந்தது குறித்து மாணவி சுவாதி கண்ணீர் வடித்தார். அவர் கூறுகையில், ‘நான் தேர்வு எழுத சென்ற நிலையில் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களை அங்கே அமரக்கூடாது என்று கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இதனால் அவர்கள் வெளியே சென்றுள்ளனர்.
பகல் 12 மணி அளவிலேயே எனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை தாங்கிக்கொண்டு தேர்வு முடியும் வரை காத்திருந்துள்ளார். தேர்வு எழுதி விட்டு நான் வெளியே வந்த பிறகு தான் விவரத்தை தெரிவித்தார். உடனே ஆட்டோவில் அவரை அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அவர் இறந்து போனார். எனக்காக வந்து இருந்த அவருக்கு இந்த கதி ஏற்பட்டது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எங்கள் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத எனக்கு ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டி அவசியம் இருந்து இருக்காது. எனது தந்தையும் இறந்து இருக்கமாட்டார்.
இவ்வாறு கண்ணீர்மல்க மாணவி சுவாதி கூறினார்.
மகள் சுவாதியை அழைத்து வந்தது குறித்து சீனிவாசனின் மனைவி அமுதா கூறியதாவது:-
எங்களது மகள் சுவாதிக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் கணவர், மகளுடன் வந்து இருந்தோம். மகள் சுவாதியை தேர்வு மையத்துக்குள் அனுப்பி விட்டு நானும், எனது கணவரும் அங்குள்ள மரத்தின் அடியில் இருந்தோம். அப்போது அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை வெளியேற்றினர். இதனால் வேறுவழியின்றி ரோட்டின் ஓரத்தில் இருந்தபடி காத்து இருந்தோம். சுவாதி தேர்வு எழுதி முடித்து விட்டு வந்ததும் அவரிடம் விசாரித்த எனது கணவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் அவர் இறந்து போனதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தோம். இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு கதறியழுதபடி அவர் தெரிவித்தார்.