பிரதமர் மோடியின் பொருளாதார நிர்வாகம் தவறானது மன்மோகன்சிங் கடும் தாக்கு
பிரதமர் மோடியின் பொருளாதார நிர்வாகம் தவறானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக நேற்று பெங்களூரு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“நாட்டில் வங்கி கடன் மோசடி கடந்த 2013-ம் ஆண்டு ரூ.28 ஆயிரத்து 416 கோடியாக இருந்தது. இது தற்போது அதாவது பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வங்கி மோசடி 4 மடங்கு அதிகரித்துவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.1.11 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்று உள்ளது.
இந்த வங்கி மோசடியில் குற்றம் செய்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறார்கள். பிரதமர் மோடி அரசின் பொருளாதார நிர்வாகம் தவறானது. அதனால், வங்கிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. நமது நாடு தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது. நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நமது நாட்டின் பொருளாதாரம் அதன் ஆற்றலுக்கு ஏற்ப வளர்ச்சி பெறவில்லை. பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து இருந்தால் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும். தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை ஏற்காமல் அரசு நிராகரித்துவிடுகிறது. மக்களின் வாழ்க்கை மீது பொருளாதார கொள்கைகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதனால் கொள்கையை வகுப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். வெறுமனே கவர்ச்சிகரமான திட்டங்களை தீட்டுவது சரியாக இருக்காது. இந்தியா பல்வேறு பிரிவுகளை கொண்ட மக்கள் வாழும் நாடு. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ஆனால் அதற்கு மத்திய அரசு உரிய பதிலை அளிப்பது இல்லை.
எந்த முடிவை எடுத்தாலும், அதில் அரசின் நோக்கம் சரியானது தான் என்று மோடி அரசு சொல்கிறது. ஆனால் அது நாட்டுக்கு பேரிழப்பை தான் ஏற்படுத்தியுள்ளது. அரசின் தோல்வியை சரிசெய்ய சரியான ஆய்வு நடத்தாதது, காரணங்களை கண்டறியாதது போன்றவற்றால் இந்தியா அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7 சதவீதமாக இருந்தது. உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோதிலும் ஒரு முறை நாங்கள் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினோம்.
தற்போது உலக அளவில் பொருளாதாரத்திற்கு நல்ல சாதகமான சூழ்நிலை. கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற நிலை இருந்தாலும், அதற்கேற்ப பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெறவில்லை. மாறாக குறைவான வளர்ச்சியை தான் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறாக இருந்தாலும் அதை மோடி அரசு அதிக பொருளாதார வளர்ச்சி இருப்பது போல் மிகைப்படுத்தி காட்டுகிறது.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி திட்டம் ஆகியவை மோடி அரசின் மிகப்பெரிய தவறான முடிவுகள் ஆகும். இந்த தவறுகளால் தான் பொருளாதார வளர்ச்சியில் நமக்கு இழப்பு ஏற்பட்டது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டன.
உலக அளவில் பொருளாதாரம் சீரான நிலை அடைந்தபோது நமது நாட்டின் ஏற்றுமதி 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது.
ஆனால் நமது நாட்டில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை, கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அதன் சுமையை மக்கள் மீது மோடி அரசு சுமத்திவிட்டது. இதன்மூலம் மக்களுக்கு தண்டனையை கொடுத்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணம் என்ன ஆனது? அதை மத்திய அரசு எதற்காக பயன்படுத்தியது என்பது குறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தரம் தாழ்ந்து வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இது பிரதமர் பதவிக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. நாட்டில் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. பிரதமர் பதவியின் கண்ணியத்தை காக்க வேண்டும். கர்நாடகத்தில் சித்தராமையா சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி இருக்கிறார். நிதி பற்றாக்குறையை அவர் உரிய சட்ட திட்டத்திற்குள் வைத்துள்ளார். அவருடைய இந்த நிதி நிர்வாகம் பாராட்டுக்குரியது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை தர வேண்டும்.” இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.