நவீன இந்தியாவை ஊக்குவிக்க பா.ஜனதா விரும்புகிறது மோடி பேச்சு

நவீன இந்தியாவை ஊக்குவிக்க பா.ஜனதா விரும்புகிறது என்று இளைஞர் அணி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2018-05-07 23:24 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கடந்த 1-ந் தேதி மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அவர் இதுவரை 4 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். ஒரு நாளைக்கு 4 பொதுக்கூட்டங்கள் என்று அவர் மாநிலத்தை சுற்றி வருகிறார். அவர் நேற்று டெல்லியில் இருந்தபடி பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகளுடன் செல்போன் செயலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இதில் மோடி பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் கடும் வெயில் இருந்தபோதிலும் மக்கள் ஆர்வமாக கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். நமது கட்சி தொண்டர்களின் முயற்சியால் இது சாத்தியப்பட்டு உள்ளது. பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்களின் மனநிலை உள்ளதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் மக்களே முன்வந்து ஆளும் காங்கிரசுக்கு எதிராக போராடுகிறார்கள்.

இளைஞர் அணி நிர்வாகிகள் சிறப்பான முறையில் தேர்தல் பணி ஆற்றி வருகிறார்கள். ஆன்லைனாக இருந்தாலும் சரி, ஆப் லைனாக இருந்தாலும் சரி, கூட்டத்தை நடத்துவதாக இருந்தாலும் இளைஞர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இளைஞர்களின் சக்தி பலமானது. இளைஞர்கள் தான் பா.ஜனதாவின் மிகப்பெரிய சொத்து. ஒருபுறம், கட்சிகள் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தாமல் பின்னால் இருக்கின்றன.

இல்லாவிட்டால் அவற்றை புறக்கணிக்கின்றன அல்லது பொய்களை பரப்புகின்றன. மற்றொருபுறம், நவீன இந்தியாவை உருவாக்க பா.ஜனதா விரும்புகிறது. அதனை ஊக்குவிக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாம் விரும்பு கிறோம். அது திறன் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, புதுமையை புகுத்துவதாக இருந்தாலும் சரி. இது செயற்கை யுகம். இதன் பின்னால் நாடு இருக்க முடியாது. நமது கட்சியில் இளைஞர்கள் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்