கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

கோத்தகிரி அருகே குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-05-07 22:30 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு கிராமம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் இலங்கேஸ்வரன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி காளியம்மாள் என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காளியம்மாள் தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேறு வீட்டிற்கு குடிபோக வேண்டும் என்றும், அப்போது தான் திரும்ப வருவேன் என்றும் கூறி விட்டு காளியம்மாள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இலங்கேஸ்வரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி செல்போனை தொடர்பு கொண்ட போது அழைப்பு ஏற்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அருகில் உள்ளவர்களுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது இலங்கேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்