கலெக்டர் அலுவலகத்துக்கு பாக்கு மரக்கன்று, பாளைகளுடன் வந்த விவசாயிகள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் பாக்கு கொள்முதல் மையம் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு பாக்கு மரக்கன்றுகள், பாளைகள் உள்ளிட்டவற்றுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, புதிய ரேஷன் கார்டு, நடைபாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி, துணை தலைவர் சக்திவேல், செயலாளர் திருஞானசம்பந்தம், பெரியசாமி, பாலா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கைகளில் பாக்கு மரக்கன்றுகள், பாளைகள், பாக்கு கொத்துகள் ஆகியவற்றை கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாக்கு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை பராமரிப்பு செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 5 டன் முதல் 7 டன் வரை மகசூல் கிடைப்பதுடன், ஒரு கிலோ பாக்கு ரூ.28 முதல் ரூ.35 வரை விலை போகிறது. இதுதவிர பாக்கு மட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் தட்டு உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொ ருட் களும் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாக்கு கொள்முதல் மையங்கள் இல்லாததால் கர்நாடகா மாநிலம் மைசூரிலும், கேரள மாநிலம் காசர்கோட்டிலும் உள்ள மத்திய அரசின் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாக்குக்கு உரிய விலை கிடைக்காமல், பாக்கு விவசாயம் நலிவடைந்து வருகிறது. எனவே பாக்கு விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு கோவையில் பாக்கு கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும். மேலும் பாக்கு விவசாயத்துக்கு தனி திட்டங்களை செயல்படுத்துவதோடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சக்திசேனா இந்து மக்கள் இயக்க மாநில செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கழுத்தில் காலி மதுப்பாட்டில் மாலை அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஒருவர் தரையில் படுத்து கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தரையில் படுத்து கொண்டு போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறினர். மேலும் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த காலி மதுப்பாட்டில் மாலைகளை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மூல காரணம் மது தான். சமீபத்தில் நெல்லையில் தனது தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த தினேஷ் என்கிற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். பல இளைஞர்களின் வாழ்க்கையை மது சீரழித்து வருகிறது. எனவே தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஊட்டி அருகே கக்குச்சி காட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு தனது உறவினர்களுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மனோகரன் கூறியதாவது:- நான் காரமடையை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தேன். இதனை வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில், அவர் காரமடையில் உள்ள அவரது கடையில் என்னை கட்டி வைத்து அடித்தார். மேலும் சாதி பெயரை கூறி திட்டினார். எனவே அவர் மீது காரமடை போலீசில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தேன். அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொ டர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.