மாணவிக்கு நீட் தேர்வு எழுத போலி நுழைவுச்சீட்டு வழங்கிய சேவை மைய பெண் நிர்வாகி போலீசார் விசாரணை
நீட் தேர்வு எழுத போலி நுழைவுச்சீட்டு வழங்கியதாக சேவை மைய பெண் நிர்வாகி மீது ராசிபுரம் மாணவியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் காமராஜ் நகர் சிங்களாந்தபுரம் காலனி ரோட்டைச் சேர்ந்தவர் நவரத்தினராஜ். இவர் ராசிபுரம் காட்டுக்கொட்டாய் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். இவரது 2-வது மகள் ஜீவிதா (வயது 17). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு எழுத நுழைவுச்சீட்டுடன் சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்றார்.
தேர்வு மைய அதிகாரிகள் ஜீவிதாவின் நுழைவுச்சீட்டை வாங்கி சரிபார்த்தபோது தேர்வு மையத்தின் பெயர் சவுடேஸ்வரி கல்லூரி என்றும், சென்டர் கோடு எண் கேரள மாநிலம் கோட்டயம் என்றும் இருந்தது. நுழைவுச்சீட்டில் காணப்பட்ட குளறுபடியால் மாணவி ஜீவிதாவை அங்கிருந்த அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர் நீட் தேர்வு எழுத முடியாமல் தனது டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விட்டதே என மனவேதனையுடன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ஜீவிதா நீட் தேர்வு எழுத முடியாமல் போனதற்கு ராசிபுரத்தில் உள்ள தமிழக அரசின் அனுமதி பெற்ற சேவை மைய பெண் நிர்வாகிதான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் தந்தை நவரத்தினராஜ் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்கோடனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
ராசிபுரம் அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் பொது சேவை மையத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி தேர்வு கட்டணம் ரூ.1400-ம், கூடுதலாக சேவை கட்டணம் ரூ.200-ம் செலுத்தி நீட் தேர்வு எழுத எனது மகள் விண்ணப்பித்தார். கடந்த 2-ந் தேதி சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத என் மகளுக்கு நுழைவுச்சீட்டு வந்திருப்பதாக கூறி அதன் உரிமையாளர் கலைச்செல்வி கொடுத்தார்.
பின்னர் 5-ந் தேதி பிற்பகல் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்ட கலைச்செல்வி எனது மகளுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்தில் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வந்திருப்பதாக சொன்னார். நாங்கள் அந்த நுழைவுச்சீட்டை பெற்று வந்தோம். கேரள மாநிலம் கோட்டயம் செல்ல போதுமான கால அவகாசம் இல்லாததால் நான், எனது மகள் ஜீவிதாவை அழைத்துக்கொண்டு சேலம் சவுடேஸ்வரி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சென்று விசாரித்தோம்.
அப்போது சேவை மைய நிர்வாகி கலைச்செல்வி கொடுத்த நுழைவுச்சீட்டு போலியானது என்று, தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எனது மகளுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு நீட் தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ. வாரியம் வழங்கியது இல்லை என்றும், கலைச்செல்வி போலியாக நுழைவுச்சீட்டை தயார் செய்து எனது மகளை மோசடி செய்ததும் தெரியவந்தது.
எனவே எனது மகளுக்கு போலியான நுழைவுச்சீட்டு கொடுத்து மருத்துவ நுழைவு தேர்வு எழுத முடியாமல் செய்து என் மகளின் கல்வி எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அப்போது வக்கீல்கள் நல்வினை விஸ்வராஜ், பாச்சல் சீனிவாசன், விடுதலை களம் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
போலி நுழைவுச்சீட்டு வழங்கியதாக சேவை மைய பெண் நிர்வாகி மீது மாணவியின் தந்தை புகார் கொடுத்துள்ள சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையொட்டி கலைச்செல்வி தலைமறைவாகி உள்ளார்.