சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
சாலையோர தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கவுதம்(வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கவுதமின் நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த சர்மா(19)(இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்), விக்னேஷ்(19). நண்பர்கள் 3 பேரும் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் வேலை தொடர்பாக மதுரைக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் 3 பேரும் நேற்றிரவு திருப்புவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டான்குளம் என்ற இடத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கவுதம், சர்மா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விக்னேஷ் காயமின்றி தப்பினார். இதனைத்தொடர்ந்து விக்னேஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த கவுதம் மற்றும் சர்மாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கவுதம், சர்மா ஆகியோர் பரிதாபமாக இறந்துபோயினர். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.