முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 20 பேர் கைது
முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 20 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பானது பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும், இப்போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு அனுமதியில்லாததால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதோடு தலைமை செயலக முற்றுகை போராட்டத்துக்கு செல்பவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்கின்றனர். இந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு ஒரு வேனில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புறப்பட்டு செல்வதை அறிந்த கடலூர் மாவட்ட போலீசார் சோழதரத்தில் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.