மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலி
மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் உள்ள 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் நீலா (45). இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிருஷ்ணவேணி, நீலா இருவரும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக புதுநல்லூர் பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் ‘லிப்ட்’ கேட்டு இருவரும் ஏறி சென்றனர். மோட்டார் சைக்கிள் காட்ரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பெண்களும் கீழே விழுந்தனர். அவர்களில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நீலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.