கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்டம் மந்திரி ராஜ்குமார் படோலே தகவல்
மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவர இருப்பதாக சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே தெரிவித்தார்.
மும்பை,
மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் சமூக புறக்கணிப்பு, ஆணவ கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையின்படி ஆணவ கொலைகள் அதிகளவில் நடக்கும் மாநிலங்களில் மராட்டியம் 4-வது இடத்தில் இருப்பது தெரியவந்தது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் மராட்டியத்தில் கலப்பு திருமணம் செய்த 8 பேர் ஆணவ கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே நிருபர்களிடம் கூறியதாவது:-
கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்க மாநில அரசு சார்பில் புதிய சட்டம் கொண்டுவர இருக்கிறோம்.
கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் நலனுக்காக ஏற்கனவே சிறப்பு திருமண சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால் புதிய சட்டம் இயற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.
உதாரணத்துக்கு தற்போதைய சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும், உயர் சாதியை சேர்ந்த ஒருவருக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பலன்கள் வழங்கப்படுவது இல்லை. ஆனால் புதிய சட்டத்தில் இதுபோன்ற குழந்தைகளுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளன.
டெல்லியில் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்படி மராட்டியத்திலும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.