விழுப்புரத்தில் தனித்தனி சம்பவம்: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் தனித்தனி சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் பாண்டியன் என்கிற முருகன் (வயது 34). ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாண்டியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் சாலாமேடு என்.டி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் பரத்குமார் (45). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டு ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரத்குமார் உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி மீனா (49). இவர் விழுப்புரம் அருகே உள்ள காகுப்பத்தில் தனது மூத்த மகள் பாரதி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது 2-வது மகள், வாலிபர் ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த மீனா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.