போட்டி போட்டு ஓட்டியதால் பள்ளத்தில் கார்கள் கவிழ்ந்ததில் வாலிபர் சாவு; 4 பேர் படுகாயம்
பல்லடம் அருகே சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கார்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். போட்டி போட்டுக்கொண்டு காரை ஓட்டியதால் இந்த விபத்து நடந்தது.
பல்லடம்,
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜர் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மகன் விஷால்கிரண்(வயது 24). இவர் 15 நாட்களுக்கு முன்பு எம்.பி.ஏ. படிப்பை முடித்தார். இந்த மகிழ்ச்சியை கொண்டாட விஷால்கிரண் திட்டமிட்டார்.
அதன்படி, தனது நண்பர்களான கோவை மசக்காளிப்பாளையத்தை சேர்ந்த ஹரீஸ்பாலாஜி(22), பிரவீன்(21), பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன்(22), தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்த ஹரிபிரசாத்(30) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் ஒரு காரில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வந்தனர். அங்கு தங்களது நண்பரான பூபாலகிருஷ்ணன் (22) நடத்தி வரும் உணவகத்துக்கு சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து கோவைக்கு 2 கார்களில் புறப்பட்டனர்.
அப்போது விஷால்கிரணின் காரில் ஹரீஸ்பாலாஜி, பிரவீன், மணிகண்டன் ஆகியோரும், பூபாலகிருஷ்ணனின் காரில் ஹரிபிரசாத்தும் ஏறிக்கொண்டனர். இதில் விஷால்கிரண் அவருடைய காரையும், பூபாலகிருஷ்ணனின் காரை ஹரிபிரசாத்தும் ஓட்டிச்சென்றனர்.
அப்போது அதிகாலை 3 மணி என்பதால் பல்லடம்-கோவை நெடுஞ்சாலையில் வாகனபோக்குவரத்து சற்று குறைவாக இருந்தது. இதனால் அவர்கள் காரை போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் அருகே ஒரு திருப்பத்தில் 2 கார்களும் சென்ற போது அவை கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 2 கார்களும் அப்பளம்போல் நொறுங்கின. இதில் பூபாலகிருஷ்ணன் தவிர மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்தவழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இதில் விஷால்கிரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மற்ற 4 பேரும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். பூபாலகிருஷ்ணன் காயமின்றி உயிர்தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்த பல்லடம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் விஷால் கிரண் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.