கோடையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க சேதமடைந்த குடிநீர் தொட்டிகள் சரி செய்யப்படுமா?
கோடையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்,
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், திரு.வி.க. ரோடு, பழையஅமராவதி பாலம், திருமாநிலையூர், ராயனூர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக அந்த குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கப்பட்ட அந்த குடிநீர் தொட்டிகளில் சிலர் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி செல்வதை காண முடிகிறது.
மேலும் சில ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுது ஏற்பட்டு மின் இணைப்பு பெட்டிகள் திறந்த நிலையில் இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. சில குடிநீர் தொட்டிகளின் முன்புற பகுதியானது குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் வார்டு மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியும் சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே கோடையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு சேதமடைந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை நகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சில குடிநீர் தொட்டிகளில் குழாய்கள் உடைந்திருப்பதை சரி செய்து தண்ணீர் விரயமாவதை தடுக்க வேண்டும். மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அடிபம்புகளையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் பகுதியிலுள்ள வீடுகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ராட்சத குழாய்களில் குடிநீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் காவிரி ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் வழக்கமாக பெறப்படும் தண்ணீர் அளவைவிட சற்று குறைவாகவே கரூர் நகராட்சிக்கு தண்ணீர் பெறப்படுகிறது. இதன் காரணமாக நகராட்சியின் சில பகுதிகளில் காவிரி குடிநீர் சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே காவிரி குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் சீராக வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.