நத்தம் போலீஸ் நிலையம் அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

நத்தம் போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து அங்கு இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2018-05-05 22:15 GMT
நத்தம்

நத்தம் போலீஸ் நிலையம் அருகே மருந்து கடை, அரிசி கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கடைகளை நேற்று முன்தினம் இரவு அதன் உரிமையாளர்கள் பாஸ்கரன், வெங்கடேசன், சேகர் ஆகியோர் வழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவு யாரோ மர்மநபர்கள் இந்த 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் மருந்து கடையில் இருந்து ரூ.9 ஆயிரத்து 500 ஆயிரம், அரிசி கடையில் இருந்து ரூ.2 ஆயிரம், பேன்சி ஸ்டோரில் இருந்து ரூ.1,500 என மொத்தம் ரூ.13 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இவர்கள் பணத்தை தவிர வேறு எந்த பொருளையும் திருட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருகே இருந்த ரசாக், பிரபாகரன் ஆகியோரின் கடைகளில் திருட முயற்சி செய்து உள்ளனர்.

இதுபற்றி நத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த திருட்டு சம்பவத்தையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா மேற்பார்வையில் இரவு நேர போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்