அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 331 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 331 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 331 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 329 பேர் தமிழ்நாட்டில் உள்ள நீட் தேர்வு மையங்களிலும், 2 பேர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள நீட் தேர்வு மையத்திலும் தேர்வு எழுதுகிறார்கள்.
இவர்களுக்கு அரசு அறிவித்தபடி அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.