போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்த நைஜீரிய வாலிபர் சாவு

அந்தேரியில் தப்பிக்கும் முயற்சியில் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்த நைஜீரிய வாலிபர் உயிரிழந்தார். அவர் போலி விசாவில் வந்ததாக பிடிபட்டவர் ஆவார்.

Update: 2018-05-03 23:22 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய நைஜீரிய நாட்டை சேர்ந்த இமேகா போனாவெஞ்சர்(வயது34) என்பவர் போலி விசாவில் வந்துள்ளார். அவரை குடிைம பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கூப்பர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு, போலீஸ் வாகனத்தில் சகாருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

விமான நிலைய பகுதியில் உள்ள அந்தேரி பறக்கும் சாலையில் வந்தபோது, திடீரென இமேகா போனாவெஞ்சர் தப்பிக்கும் முயற்சியில் போலீஸ் வாகனத்தின் கதவை திறந்து கீழே குதித்து உள்ளார். இதில், அவர் பறக்கும் சாலை பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்