சிறு தானியங்களை சேமித்து வைத்து விற்றால் நல்ல விலை கிடைக்கும்

சிறு தானியங்களை அரசு கிட்டங்கியில் சேமித்து வைத்து விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்று உசிலம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் தனுஷ்கோடி தெரிவித்தார்.

Update: 2018-05-03 23:30 GMT
உசிலம்பட்டி

உசிலம்பட்டி வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சி நடைபெற்றது. உசிலம்பட்டி எம்.எல்.ஏ.நீதிபதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் தனுஷ்கோடி வரவேற்றுப் பேசினார். வேளாண்மை உதவி செயற்பொறியாளர் செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திராஜா, விதை சான்று அலுவலர் மீனாட்சிசுந்திரம், கால்நடை உதவி மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 226 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உழவன் செயலி மற்றும் பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றியும் வேளாண் கருவிகள் நுண்ணுயிர் பாசனம், சோலார் பம்பு அமைத்தல் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், பசுமை குடில்கள் மூலம் ஏராளமான நன்மைகளை அடையலாம்.மேலும் சிறுதானியங்கள் மற்றும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அறுவடை காலத்தில் போதிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனர்.

எனவே அறுவடை செய்தவுடன் தானியங்களை விற்பனை செய்யாமல் அவைகளை அரசு கிட்டங்கிகளில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்தால் இடைத்தரகர்களை தடுக்கப்படுவதுடன் விவசாயிகள் நஷ்டத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தினர். முன்னதாக வறட்சியான காலங்களில் ஒரு துளி தண்ணீர்கூட விரையமாகாமல் இருக்க சொட்டு நீர், மற்றும் ஸ்பரிங்லர் வாயிலாக விளை நிலங்களுக்கு எப்படி தண்ணீர் பாய்ச்சுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

2022-ம் ஆண்டுக்குள் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று விவசாயிகள் அனைரும் இருமடங்கு வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் துணை தாசில்தார் ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சோலை குரும்பன், முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டி, உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க. செயலாளர் பூமா.ராஜா,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சுருளிமணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வேளாண்மை துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்