டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவுடையார்கோவில்,
ஆவுடையார்கோவில் அருகே கொழுவனூரில் ஆவுடையார்கோவில்-மீமிசல் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று வேள்வரை ஊராட்சி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகேஷ் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக வந்தனர்.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக்அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்களை மீமிசல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால். முற்றுகையிட சென்றவர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆவுடையார்கோவில்-மீமிசல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டாஸ்மாக் தாசில்தார் சார்லஸ், கோட்ட கலால் அதிகாரி பரணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, துணை தாசில்தார் ஜபருல்லா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இதுதொடர்பான சமாதான கூட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
இதனை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல கொலுவனூர், நரியனேந்தல் பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் இந்த பகுதியில் போலி மதுபானம் விற்பனை செய்வதால் அரசு டாஸ்மாக் கடை தொடர்ந்து நடத்த வேண்டும் என தொடர் முழக்க போராட்டம் அறிவித்து இருந்தனர். இதற்கான சமாதான கூட்டமும் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.