நொளம்பூர் பகுதியில் தொடர் கொள்ளை: தாய் பெயரில் முதியோர் இல்லம் கட்ட திருட்டில் ஈடுபட்டவர் கைது
நொளம்பூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்ற வாளியை போலீசார் கைது செய்தனர். தாய் பெயரில் முதியோர் இல்லம் கட்ட பணம் தேவைப்பட்டதால் அவர் மீண்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பூந்தமல்லி,
சென்னை நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நொளம்பூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்ற பவுடர் சேகர் (வயது 52) என்பதும், அவர்தான் நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்துடன், அவரது உருவம் ஒத்துப்போனதும் தெரிந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
கைதான சேகர், பழைய குற்றவாளி ஆவார். வாலிப பருவத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு உள்ளார். 2006-ம் ஆண்டு சென்னை அரும்பாக்கம், அமைந்தகரை ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது அதிக குற்ற வழக்குகள் இருந்ததால் சேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதையடுத்து அவருடைய மனைவி மற்றும் தாயார், சேகரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்த சேகர், அதன்பிறகு திருட்டு தொழிலை கைவிட்டு இருந்தார்.
தாமும் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்து எம்.எஸ்.சி. உளவியல் படிப்பை படித்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு, காமராஜர் சாலை, 1-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து அங்கு போதை மறுவாழ்வு மையம் நடத்தி வந்தார். போதைக்கு அடிமையான பலர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும் அவர், தனது தாயின் மீது கொண்ட பாசம் காரணமாக திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் தனது தாய் பெயரில் முதியோர் இல்லம் கட்டி வந்தார். போதை மறுவாழ்வு மையத்தில் போதிய வருமானம் இல்லாததால் முதியோர் இல்லம் கட்டுமான பணிக்கு தேவையான பணம் கிடைக்காமல் கட்டுமான பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே முதியோர் இல்லம் கட்ட தேவையான பணத்துக்காக மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து முதியோர் இல்லம் கட்ட முடிவு செய்தார். அதன்படியே மீண்டும் தனது திருட்டு தொழிலை தொடங்கினார்.
நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் பூட்டு கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அதில் வரும் பணத்தை கொண்டு முதியோர் இல்ல கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வந்தார் என்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான சேகரிடம் இருந்து 50 பவுன் நகைகள், 1 கார், 1 மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.