ரஷியாவில் கடலில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 2 பேர் பலி
ரஷியாவில் கடலில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 2 பேர் இறந்தனர்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெய்வந்த் (வயது 18). இவர் ரஷியாவில் உள்ள கிரிமியா பெடரல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (18). இவரும் அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். ஜெய்வந்த், நவீன் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்தனர்.
கடந்த 3 நாட்களாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது அவர்கள் கடலில் குளிக்க விரும்பி இறங்கினர்.
கடலில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் இருவரும் சிக்கினர். இருவரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
இதுபற்றி ஜெய்வந்த் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த ஜெய்வந்த், நவீன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
ரஷியாவில் கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்களின் உடல்களையும் தமிழகம் கொண்டுவர தூதரகம் மூலம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.