கருணாஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்யக்கோரி தி.மு.க. துண்டு பிரசுரம் வினியோகம்
கருணாஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.
தொண்டி,
தொண்டி பேரூராட்சி பகுதியில் தி.மு.க.சார்பில் நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இஸ்மத்நானா தலைமையில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சவுந்திரபாண்டியன், தொண்டி நகர் இளைஞரணி அமைப்பாளர் தாஸ், மீனவரணி அமைப்பாளர் காளிதாஸ், ராமநாதன், ராமச்சந்திரன், வார்டு செயலாளர் தொண்டியப்பா, அவை தலைவர் கணேசன், கோட்டைச்சாமி, நகர் துணை செயலாளர் காதர்மைதீன் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இத்தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க வில்லை. ஆனால் தொகுதிக்குள் வருவதற்கு பயமாக உள்ளது என பேட்டி கொடுக்கிறார். மேலும் பாதுகாப்பு கேட்டு தமிழக அரசிடம் ஓடுகிறார். இவர் எப்படி தொகுதி மக்களை பாதுகாப்பார். இவருக்கு எம்.எல்.ஏ. பதவி தேவையில்லை. எனவே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தொண்டி பகுதிக்கு ஏராளமான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி தொண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி கொடுத்துள்ளார். மேலும் சாலைகள், தொண்டிக்கு தனி குடிநீர் திட்டம், போக்குவரத்து பணிமனை போன்ற பல திட்டங்கள் வருவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
இப்படி தொகுதி மக்களை பற்றி சிந்திக்கும் தி.மு.க.வும், அதன் தலைவர்களும் இருக்கும் நிலையில் தொகுதிக்குள் நுழைவதற்கே பயந்து ஓடும் கருணாஸ் எம்.எல்.ஏ. போன்றவர்கள் தேவையா என்று பொதுமக்களே சிந்திக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் வழங்கிய உத்தரவை காலதாமதம் செய்த மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.