கரூரில் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் 2 நாட்களில் ரூ.5½ லட்சம் வருவாய்
கோடைகால விடுமுறையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலால் கரூரில் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் 2 நாட்களில் ரெயில்வேக்கு ரூ.5½ லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர்,
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். மேலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்று வருகின்றனர். மேலும் விசேஷ நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு குடும்பத்துடன் சென்று பங்கேற்கின்றனர். இவ்வாறு செல்லும் நபர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
பஸ் கட்டணத்தை விட ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று குறைவாக இருப்பதால் குடும்பத்துடன் செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை நாடி செல்கின்றனர். இதனால் ரெயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கரூர் வழியாக இயக்கப்படும் கோவை- நாகர்கோவில், ஈரோடு- நெல்லை, திருச்சி- சேலம் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ரூ.5½ லட்சம் வருவாய்
கரூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கரூர் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.5½ லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மற்ற நாட்களில் டிக்கெட் விற்பனை இவற்றை விட சற்று குறைவாக காணப்படும் என்றனர். கோடை கால விடுமுறை இன்னும் இருப்பதால் சுப முகூர்த்த தினங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில்களில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.