திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: கண்டக்டர் உள்பட 6 பேர் படுகாயம்
திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். டிரை வரின் கவனக்குறைவுதான் விபத்துக்கு காரணம் என போலீசில் பெண் பயணி புகார் தெரிவித்தார்.
திருச்சி,
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பூலாண்டிப்பட்டியை சேர்ந்த சேகர்(வயது33) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக உசிலம்பட்டி அய்யனார்குளத்தை சேர்ந்த சின்னையன்(49) பணியில் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் நள்ளிரவு திருச்சி அருகே பஞ்சப்பூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் டிரைய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல அரசு பஸ் டிரைவர் சேகர் முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது.
இந்த விபத்தில் கண்டக்டர் சின்னையன், பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்கள் பவானி(22), கயல் விழி(11), மதுரை பேரையூரை சேர்ந்த அனிதா(33), மதுரை அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த தீபா(25), மதுரை புதிய எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த பாண்டியன்(20) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுலோச்சனா மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பஸ்சில் பயணம் செய்து படுகாயம் அடைந்த மதுரையை சேர்ந்த பவானி என்ற பெண், போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், விபத்துக்கு அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவுதான் காரணம். பஸ் சென்று கொண்டிருக்கும்போதே டிரைவர் சேகர், ஒரு கையால் டி.வி.டி.பிளேயரில் சினிமா பாட்டு போட்டார் என்றும், அதோடு மட்டுமல்லாது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்லவும் முயன்றார் எனவும் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதன்பேரில், டிரைவரிடம் திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.