குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமாக காணப்படும் நெம்மேலி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர்,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 10-வது வார்டை சேர்ந்த நெம்மேலி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெம்மேலிக்கு செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார் சாலை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
நெம்மேலி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு இந்த சாலையின் வழியாக தான் கீழ்வேளூர் சென்று அங்கிருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கீழே விழும் அபாய நிலையில் சாலை உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலை மோசமான நிலையில் உள்ளதால் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள நெம்மேலி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.