ஆய்வுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடியை முற்றுகையிட முயற்சி காங்கிரசார் 100 பேர் கைது
புதுவையில் ஆய்வுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடியை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதியில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராமப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் சேர்ந்திருப்பதை கண்ட அவர் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் இலவச அரிசி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பெடியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்தினை உடனே வாபஸ் பெற்றார். இருந்தபோதிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தநிலையில் முத்திரையர்பாளையம் ஆயி குளத்தில் ஆய்வு நடத்துவதற்காக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி புறப்பட்டார்.
அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரசார் திட்டமிட்ட னர். இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையில் அவர்கள் வழுதாவூர் சாலையில் காங்கிரஸ் கொடியுடன் கூடினார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் கவர்னர் வரும் வழியை மாற்றினார்கள். வழுதாவூர் சாலைக்கு பதிலாக மூலக்குளம் வழியாக கவர்னரை அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கவர்னரை முற்றுகையிடும் விதமாக காங்கிரசார் கவர்னர் வரும் வழியை நோக்கி ஓடினார்கள். அவர்களை போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கவர்னருக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள்.
ஒரு கட்டத்தில் சிலர் போலீசாரின் தடுப்பையும் மீறி ஓடினார்கள். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஆயி குளத்துக்கு வந்த கவர்னர் கிரண்பெடி குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அந்த குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் குறித்த படத்தையும் பார்வையிட்டார். மேலும் அங்கு திறப்பதற்காக ஆயி சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் அந்த சிலையை திறக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் கூறியதாவது.
புதுவை கவர்னர் கிரண்பெடி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக துன்பத்தை ஏற்படுத்துகிறார். மக்களின் வரிப்பணம் ஆண்டுக்கு ரூ.4½ கோடி கவர்னர் மாளிகைக்கு செலவிடப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு புதுவை மக்களுக்கு எதிராக நடக்கிறார்.
கிரண்பெடி பொறுப்பேற்பதற்கு முன்பே புதுச்சேரி சுத்தமாக இருக்கிறது. ஆனால் புதுவை சுகாதாரமற்று இருப்பதுபோல் அவர் பேசி வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த ரங்கசாமி ஆட்சியின் பாது ஆயி குளத்துக்காக எதுவும் செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிக்காக தற்போது அரசு ரூ.5 கோடியை ஒதுக்கியுள்ளது. அதை தெரிந்துகொண்டே கவர்னர் ஆய்வு என்ற பெயரில் இங்கு வருகிறார். அவரது நாடகம் மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.