ஒதிக்காட்டில் கிராமசபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூரை அடுத்த ஒதிக்காட்டில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-05-01 23:45 GMT
திருவள்ளூர்,

கிராமசபை கூட்டத்திற்கு திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வட்டாரவளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து திட்ட அறிக்கை தயாரித்தல், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம், கழிவறை இல்லாதோர் விவரப்பட்டியல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற பல்வேறு பொருட்கள் விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் தலைமையில் சுகாதார உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்றுகொண்டார்கள். 

மேலும் செய்திகள்