தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது - கனிமொழி எம்.பி.
தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. மகளிரணி கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட மகளிரணி-தொண்டரணி ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மற்ற மாவட்டத்தில் செயல்படும் தி.மு.க. மகளிரணியினருக்கும், குமரி மாவட்டத்தில் உள்ள மகளிரணியினருக்கும் இடையே நிறைய வித்தியாசத்தை பார்க்க முடிகிறது.
மற்ற மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்திய போது மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது யாரும் எதிர்மறையான கருத்துகள் சொல்லவில்லை. ஆனால், குமரி மாவட்டத்தில் அப்படி இல்லை. மாவட்ட செயலாளர்கள் மீது வெளிப்படையான கருத்துகள் வைக்கப்படுகிறது. இதை பார்க்கையில், குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மகளிரணியினர் எந்த அளவுக்கு ஜனநாயகமாக நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. அவ்வாறு சொல்லப்படும் கருத்துகளுக்கு, மாவட்ட செயலாளர்களும் பொறுப்பான பதில் அளிப்பது மகிழ்ச்சியான விஷயம்.
கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு அழைப்பை எதிர்பார்க்காமல் தாமே முன் வந்து கலந்து கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு உள்ள மகளிரை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களை தொடர்ந்து சந்தித்து பேச வேண்டும். அப்பகுதி சார்ந்த மக்களின் பிரச்சினைகளை முழு ஈடுபாட்டுடன் முன்னின்று தீர்த்து வைக்க வேண்டும்.
தற்போது, தமிழகத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் தொழில் தொடங்க வருவதில்லை. இருக்கிற தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் உரிமை கொஞ்சம், கொஞ்சமாக நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டக்காரர்களை, அரசு ஒடுக்கி வருகிறது. தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகிறது. இன்று வரையிலும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடி வருகின்றனர். 100-நாள் வேலை திட்டத்திலும் ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு மகளிரணியினர் அடிப்படை காரணமாக இருக்க வேண்டும். நாளையோ அல்லது 6 மாதம் கழித்தோ தேர்தல் வரலாம். அதற்கு நாம் இப்போதே நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.