கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தராததால் வங்கிகளை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்
கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தராததால் வங்கிகளை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தராததால் வங்கிகளை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கடைவீதியில் சேலம் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு 11 இயக்குனர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக நேற்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. காலை 7 மணி முதலே வங்கி முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.
இதையடுத்து 10 மணியளவில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் எஸ்.ஆர்.அண்ணாமலை, வக்கீல் கணேசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் வங்கிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வங்கிக்குள் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை சிலர் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஏற்கனவே விண்ணப்ப படிவம் பெற்றவர்களே இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதுவரை காத்திருக்குமாறு கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே வேட்பு மனுக்கள் தரப்படுவதாகவும், தி.மு.க.வினருக்கு திட்டமிட்டு மறுக்கப்படுவதாகவும் அங்கிருந்த போலீசாரிடம் தி.மு.க.நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், நகர கூட்டுறவு வங்கியின் வெளியே சாலையில் தி.மு.க.வினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நகர கூட்டுறவு வங்கிக்கு தி.மு.க.வினர் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், சேலம் செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் வேட்புமனுக்களை பெறுவதற்காக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் ஏராளமானோர் வந்தனர். அப்போது, மாநகர தி.மு.க.செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மனுத்தாக்கல் செய்ய வந்த தி.மு.க.வினரை வங்கிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வினரை தவிர வேறு யாரையும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்காததால், தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிவெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் மதியம் 1.30 மணியளவில் செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு வந்து, அங்கிருந்த தி.மு.க.நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அங்கிருந்த கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சூரமங்கலம் சுப்ரமணியநகர் கூட்டுறவு நகர வங்கியிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய தி.மு.க.வினர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் ஜங்ஷன் மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தி.மு.க.வை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மறியலில் ஈடுபட்டதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கி, 2-வது அக்ரஹாரத்தில் உள்ள சேலம் பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலை சங்கம் ஆகியவற்றிலும் தி.மு.க.வினருக்கு வேட்பு மனுக்கள் தராததால் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தப்பட்டது. மொத்தம் மறியலில் ஈடுபட்ட 69 பேர் கைது செய்யப்பட்டனர்.