வள்ளிபுரம் அருகே குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
திருப்பூரை அடுத்த வள்ளிபுரம் அருகே குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வள்ளி புரம் ஊராட்சியில் உள்ள அம்மா பசுமை நகர்-1 குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 374 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்டவை இல்லை. பொதுக்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் குடிநீர் வருவது இல்லை. இதனால் பணம் கொடுத்து லாரிகள் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அளித்த மனுவில், பல்லடம் மங்கலம் ரோட்டில் கிளை சிறைச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளது. பல்லடத்தில் அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கு அரசு கட்டிடங்கள் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே கிளைச்சிறை கட்டிடத்தை அரசு அலுவலக கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் மயில்கள் அதிகம் உள்ளதால் அவற்றை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், தமிழக அரசின் மின்வாரிய இணையதளம் மூலமாக வீடுகள், தொழிற்சாலைகளுக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மின் இணைப்பு வழங்குவதில் தாமதப்படுத்தி வருகிறார்கள். உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சேவ் அமைப்பினர் அளித்த மனுவில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி வைப்பதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் அளித்த மனுவில் அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விளம்பர பலகைகளில் வைக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் 240 மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 5 பேருக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட இயற்கை மரண நிவாரண தொகைக்கான உத்தரவை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பொது இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கினார்.