விவசாய கிணற்றில் பிணமாக மிதந்த என்ஜினீயர்
ஜலகண்டாபுரம் அருகே விவசாய கிணற்றில் என்ஜினீயர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜலகண்டாபுரம்,
ஜலகண்டாபுரம் அருகே சவுரியூரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது விவசாய தோட்டம் சமத்துவபுரத்தில் உள்ளது. இவரது நிலத்தில் தென்னை மரங்கள் வைத்து பராமரித்து வருகிறார். நேற்று காலை 7 மணிளவில் ஜெகதீசன் தோட்டத்தில் பணிபுரியும் மாரிமுத்து என்பவர் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜெகதீசன் கிணற்றுக்கு சென்று எட்டி பார்த்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரது உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் கிடந்த அந்த வாலிபரின் உடலை கயிறு கட்டி மேலே மீட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் இறந்த வாலிபர், சமத்துவபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (வயது 46) என்பவரின் மகன் யுவராஜ் (22) என்பது தெரியவந்தது. யுவராஜ் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளதும், தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து விலகி எந்த வேலைக்கும் செல்லாமல் தற்போது வீட்டில் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்குள் தூங்கிய யுவராஜ் காலையில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் ஜலகண்டாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.