பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது. பின்னர் மறுகாப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தினந்தோறும் இரவு சப்பார வாகனம், சிம்மம், பூதம், அன்னப்பட்சி, யானை, பூந்தேர் ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 22-ந் தேதி மாலையில் வடிசோறு மற்றும் வெட்டுங்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை அம்மன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக தேர் உலா வந்தது. இதில் பொத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று (புதன் கிழமை) காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மாலையில் பொங்கல் மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) காலை மஞ்சள் நீராடல், மாலை முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் இந்திரா, செயல் அலுவலர் சாந்தி, ஊர் காரியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.