சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் பிரியங்கா காந்தி பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்ய தலைவர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்பட தலைவர்கள் பிரசாரம் நடத்துவார்கள். கர்நாடகத்தை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் மிக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரசிடம் இருந்து கர்நாடகத்தை கைப்பற்ற பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தேர்தல் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்குமே மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரை கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய அழைத்து வர வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கர்நாடக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தது சிக்கமகளூரு தொகுதி தான். இதையடுத்து அந்த தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியின் வருகையை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.