வேலூர் மாவட்டத்தில் 4 நக்சலைட்டுகள் ஊடுருவலா?
வேலூர் மாவட்டத்திற்குள் 4 நக்சலைட்டுகள் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
தமிழகத்தில் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பல கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழகத்தில் நக்சலைட்டுகள் உள்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வனப்பகுதி வழியாக நக்சலைட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த 4 நக்சலைட்டுகள் வேலூர் மாவட்டத்தில் ஊடுருவியதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட நக்சல் தடுப்புப்பிரிவு போலீசார் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது எல்லைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதா? என்று போலீசார் கேட்டறிந்தனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் மாவட்ட நக்சல் தடுப்புப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து போலீஸ் உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆந்திர மாநில எல்லையையொட்டி வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளன. ஆந்திர-தமிழக மாநில எல்லைப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை இரு மாநில போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளார்களா? என வேலூர் மாவட்ட நக்சல் தடுப்புப்பிரிவு போலீசார் பல்வேறு எல்லைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட நக்சல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா?, நக்சலைட்டுகள் யாராவது பதுங்கி உள்ளார்களா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இது வழக்கமாக நடைபெறும் சோதனையாகும். வேலூர் மாவட்டத்தில் தற்போது நக்சலைட்டுகள் ஊடுருவல் எதுவும் இல்லை. 4 நக்சலைட்டுகள் ஊடுருவியதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.