பாதியில் விடப்பட்ட பணிகளால் குடிநீர் கிடைக்காமல் பல மாதங்களாக அவதிப்படும் அம்பலக்கொல்லி மக்கள்
பாதியில் விடப்பட்ட பணியால் அம்பலக்கொல்லி கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் பல மாதங்களாக அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் காலை முதல் மாலை வரை நன்கு வெயில் காணப்படுகிறது. பின்னர் சில சமயம் லேசான சாரல் மழை பெய்கிறது. ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மழை பெய்யவில்லை.
கூடலூர் தாலுகா தேவாலாவில் இருந்து அட்டிக்கு செல்லும் சாலையில் அம்பலக்கொல்லி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். நெல்லியாளம் நகராட்சியின் 11-வது வார்டில் இக்கிராமம் உள்ளது. தோட்ட மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தடுப்பணைகள் எதுவும் கிடையாது. இதனால் நகராட்சி மூலம் அதே பகுதியில் 2 கிணறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதில் ஒரு கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மாரியம்மன் கோவில் அருகே மண் தரையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பிளாஸ்டிக் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி பிளாஸ்டிக்தொட்டியை உயரத்தில் வைப்பதற்காக சிமெண்டு தூண்களை கட்டியது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.
மேலும் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, பிளாஸ்டிக்தொட்டியை உயரத்தில் வைத்து குடிநீர் சப்ளை செய்வதற்கு சிமெண்டு தூண்கள் கட்டப்பட்டது. இப்பணி நடைபெறுவதால் பல மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை.
இதனால் அதே பகுதியில் உள்ள மற்றொரு கிணற்றில் இருந்து நீர் இறைத்து பயன்படுத்தி வருகிறோம். அந்த கிணற்றிலும் தண்ணீர் வற்றி வருகிறது. எனவே பாதியில் விடப்பட்ட பணியை நிறைவு செய்து பிளாஸ்டிக்தொட்டியை உயரத்தில் வைத்து விரைவாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.