காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு மீது கல்வீச்சு: 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு மீது கல் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பேரமனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி லாவண்யா (வயது 34). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் மறைமலைநகர் அருகே மகேந்திராசிட்டி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாவண்யா பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
இதனை அறிந்ததும் லாவண்யாவின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியின் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு 2 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக அரிகிருஷ்ணன் (25), ஸ்டாலின் (22), உன்னிகிருஷ்ணன் (23), சிவகுமார் (28), சதீஷ்(23), கோகுல் (26), பாலமுருகன் (26), பிரசாத் (20), ரியாக் (29), அரிகுமார் (27) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.