சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிமைப்பணிகள் நாள் கொண்டாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிமைப்பணிகள் நாள் கொண்டாட்டப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குடிமைப்பணிகள் நாள் (சிவில் சர்வீசஸ் தினம்) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் ரோகிணி முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் வெங்கடபிரியா, போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் குடிமைப்பணிகள் நாளையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகநாதன் நன்றி கூறினார்.