கோவில்பட்டியில் ஆதி தமிழர் கட்சியினர் ரெயில் மறியல்; 56 பேர் கைது

கோவில்பட்டியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட ஆதி தமிழர் கட்சியினர் 56 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-21 23:17 GMT
கோவில்பட்டி,

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இதனை அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். தலித் மக்களுக்கான சட்ட பாதுகாப்பில் மெத்தன போக்கோடு செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஆதி தமிழர் கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் காலை 11.53 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ஆதி தமிழர் கட்சியினர் ஓடிச் சென்று, ரெயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மாநில நிதி செயலாளர் விடுதலை வீரன், மாநில அமைப்பு செயலாளர் திலீபன், மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், வக்கீல் அணி செயலாளர் பாலமுருகன், கொள்கை பரப்பு செயலாளர் முருகேசன், தென் மண்டல செயலாளர் மனோகர், மாவட்ட செயலாளர்கள் சண்முகவேல், குட்டிபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 56 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லாபாய் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் ரெயில் சிறிதுநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்