முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன் பரமேஸ்வர் சொல்கிறார்
முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் மேலிடமும், எம்.எல்.ஏ.க்களும் தான் முடிவு செய்வார்கள் என்றும், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன் என்றும் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி எனது தலைமையில் சந்தித்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநில தலைவராக நான் இருந்ததால், முதல்-மந்திரியாகி இருக்கலாம். ஆனால் கொரட்டகெரே தொகுதியில் போட்டியிட்டு நான் தோல்வி அடைந்ததால் முதல்-மந்திரி பதவி எனக்கு கிடைக்காமல் போனது. நான் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் எனது தலைமையில் தான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 5 ஆண்டுகளிலும் மாநிலம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக தான் கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சிறப்பான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி ஆவேன் என்று சித்தராமையா சொல்லி வருகிறார்.
ஆனால் முதல்-மந்திரி யார்? என்பது காங்கிரஸ் மேலிடமும், எம்.எல்.ஏ.க்களும் தான் தீர்மானிப்பார்கள். சித்தராமையா 5 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்ததால், இந்த முறை வேறு ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யலாம். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவரே முதல்-மந்திரியாக இருந்ததில்லை. எனக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதுபோன்று, காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது.
அதனால் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன். ஒருவர் எம்.எல்.ஏ. பதவிக்கு ‘சீட்‘ கேட்பது எதற்காக, அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டும், அதன்பிறகு, மந்திரியாக வேண்டும் என்பதற்காக தான். பதவியின் மீது எல்லாருக்கும் ஆசை இருக்கிறது. அதுபோல, நானும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஆனாலும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பது தான் எனது முதல் குறிக்கோள்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.